தொழில் நுட்ப ரீதியில் தயாரிக்கப்பட்ட 'ஸ்மார்ட்' பந்து - News View

Breaking

Monday, September 13, 2021

தொழில் நுட்ப ரீதியில் தயாரிக்கப்பட்ட 'ஸ்மார்ட்' பந்து

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கிரிக்கெட் ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக அதி நவீன ரீதியில் 'ஸ்மார்ட்' பந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த 'ஸமார்ட்' பந்தை 'ஸ்போர்ட்கோர்' எனும் நிறுவனம் நீண்ட காலமாக கிரிக்கெட் உபகரணங்களை தயாரித்து வரும் 'கொக்கபுரா' நிறுனத்துடன் இணைந்து இந்த பந்தை வடிவமைத்துள்ளது.

புதிய கிரிக்கெட் பந்தில் மின்னணு 'சர்க்கியுட்' பொருத்தப்பட்டுள்ளது. அது பந்தின் வேகத்தை கணிப்பிடுகிறது. பந்து எத்தனை தடவைகள் சுழல்கின்றமை மற்றும் பந்து உருவாகும் வலிமை ஆகியன தொடர்பில் கணிப்பிடப்படுகிறது.

தகவல்களை கணினி, ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் கண்காணிக்க முடியும்.
இது கிரிக்கெட் ஆய்வாளர்களுக்கு ஒரு நன்மையை அளிக்கிறது. மேலும், பந்துவீச்சாளரின் கையிலிருந்து பந்து தரையில் விழும் வரை பந்து சுழல்கின்ற எண்ணிக்கை மற்றும் அது வீழ்ந்த பிறகு பந்து சுழலும் வேகம் போன்ற தரவுகளை கணக்கிட முடியும்.

பந்தின் வேகத்தையும், பந்து துடுப்பாட்ட மட்டையை தாக்கும் வேகத்தையும் பதிவு செய்து, பந்தின் வலிமையை இந்த புதிய ஸ்மார்ட் பந்து மூலம் அறியலாம்.

பந்து வீசும்போது பந்தின் உழைப்பு மற்றும் சக்தியை பந்துவீச்சாளர் கண்காணிக்க முடியும். மற்றும் இந்தத் தரவை போட்டியிடும் அணிகள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். இது வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என கிரிக்கெட் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments:

Post a Comment