வட கொரியா அணுசக்தி ஆலையை விரிவுபடுத்தும் காட்சிகளை வெளிக்காட்டிய செய்மதிப்படம் - News View

Breaking

Sunday, September 19, 2021

வட கொரியா அணுசக்தி ஆலையை விரிவுபடுத்தும் காட்சிகளை வெளிக்காட்டிய செய்மதிப்படம்

வட கொரியா அதன் முக்கிய யோங்பியான் அணுசக்தி வளாகத்தில் யுரேனியம் செறிவூட்டல் ஆலையை விரிவுபடுத்தும் காட்சிகளை அண்மைய செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இது வட கொரியாவின் வெடி குண்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தினை தெளிவுபடுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவுடன் நீண்ட காலமாக செயலற்ற அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தைக்கு மத்தியில் வட கொரியா சமீபத்தில் ஆறு மாதங்களில் கடந்த நாட்களில் ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்துள்ளதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த பதற்றங்களுக்கு மத்தியிலேயே அண்மைய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

செறிவூட்டல் ஆலை விரிவாக்கம் பெரும்பாலும், யோங்பியான் தளத்தில் ஆயுத தர யுரேனியம் உற்பத்தியை 25 சதவிகித்தால் வட கொரியா அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது என்று நிபுணர்கள் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செப்டம்பர் 1 ஆம் திகதி எடுக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் புகைப்படம், வட கொரியா மரங்களை அகற்றி கட்டுமானத்திற்கான நிலத்தை தயார் செய்ததையும், கட்டுமான அகழ்வாராய்ச்சியையும் காணக்கூடியதாக இருப்பதை வெளிக்காட்டியது.

செப்டம்பர் 14 அன்று எடுக்கப்பட்ட இரண்டாவது படம், அந்தப் பகுதியை மூட ஒரு சுவர் எழுப்பப்பட்டதையும், ஒரு அடித்தளத்தில் வேலை செய்வதையும் மற்றும் புதிதாக அடைக்கப்பட்ட பகுதிக்கு அணுகலை வழங்குவதற்காக முன்னேற்றத்தையும் காண்பித்துள்ளது.

No comments:

Post a Comment