சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு நிறுவனங்கள் கோரிக்கை - News View

Breaking

Wednesday, September 15, 2021

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு நிறுவனங்கள் கோரிக்கை

(எம்.ஆர்.எம்.வசீம்)

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. என்றாலும் இது தொடர்பில் எந்த தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ள வில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்து சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இவர்களின் கோரிக்கை தொடர்பில் இதுவரை நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. எதிர்வரும் தினங்களில் இதுதொடர்பாக நிறுவனங்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment