நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை : பேருந்து, புகையிரதம் ஊடாகவா கொவிட் பரவலடைகிறது - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் - News View

Breaking

Sunday, September 19, 2021

நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை : பேருந்து, புகையிரதம் ஊடாகவா கொவிட் பரவலடைகிறது - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும். ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக நிவாரணம் வழங்கப்படா விட்டால் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். பேருந்து, புகையிரதம் சேவை ஊடாகவா கொவிட் தொற்று பரவலடைகிறது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையயாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கவுள்ளதாக போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக நிவாரணம் கிடைக்கா விட்டால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

தனியார் பேருந்து, புகையிரதங்களை தவிர ஏனைய போக்கு வரத்து சாதனங்கள் சேவையில் ஈடுபடுகின்றன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதா என்று கருதும் அளவிற்கு வாகன நெரிசல் காணப்படுகிறது.

புகையிரதம் மற்றும் தனியார் பேருந்து சேவையிலா கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலடைகிறது என்றார்.

No comments:

Post a Comment