அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொன்ட்டானாவில் ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல் மற்றும் சிகாகோ இடையே பயணிக்கும் ஆம்ட்ராக் என்ற ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக லிபர்ட்டி கவுண்டி ஷெரிஃப் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹெலினா நகரின் வடக்கே 150 மைல்கள் (241 கிலோமீட்டர்) மற்றும் கனடாவின் எல்லையிலிருந்து சுமார் 30 மைல்கள் (48 கிலோ மீட்டர்) தொலைவிலேயே சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டன.
விபத்தின்போது ரயிலில் சுமார் 147 பயணிகள் மற்றும் 13 பணியாளர்கள் இருந்துள்ளனர். 3 பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகளை மீட்டு பாதுகாப்பாக அனுப்பும் பணியும் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment