வரகாபொல, அம்பேபுஸ்ஸா இடையிலான நிர்மாணப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 25, 2021

வரகாபொல, அம்பேபுஸ்ஸா இடையிலான நிர்மாணப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பணிப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ இடையிலான கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைத்து மக்களுக்கு இடையூறின்றி பயணம் செய்வதற்காக ஆரம்பிக்கபட்ட வரகாபொல இடை வீதி நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவு செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கும் திட்டப்பணிப்பாளருக்கும் தான் ஆலோசனை வழங்கியதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு இணையாக வலது புறத்தில் நிர்மாணிக்கப்படும் வரும் வராகபொல இடை வீதிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், 98% இழப்பீடு தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வரகாபொலவை தவிர்த்து செல்வதற்கு வேறு மாற்று வழிகள் இல்லாததால், கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 2,350 மீட்டர் நீளமும் 22.80 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த வீதி நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த வீதியின் குறுக்கே 550 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் அமைக்கப்படுவது இந்த வீதியின் விசேட அம்சமாகும். இந்த திட்டத்திற்கு ரூ .4,111.16 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு - கண்டி வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ இடையேயான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு போக்குவரத்தை எளிதாக்குவதும் வரகாபொலவின் முன்னேற்றத்திற்கு உதவுவதுமே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment