ஊரடங்கு உத்தரவால் கலால் திணைக்களத்துக்கு 25 பில்லியன் ரூபா வருவாய் இழப்பு - News View

Breaking

Tuesday, September 14, 2021

ஊரடங்கு உத்தரவால் கலால் திணைக்களத்துக்கு 25 பில்லியன் ரூபா வருவாய் இழப்பு

ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக இலங்கை கலால் திணைக்களத்துக்கு 20 முதல் 25 பில்லியன் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே குணசிறி தெரிவித்துள்ளார். 

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்கள் மற்றும் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் இப்போது வரை ஒரு மாத காலத்தில் பிறக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கலால் திணைக்களத்துக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

உரிமம் பெற்ற மதுக்கடைகள் மூடப்படுவதால் நாள் ஒன்றுக்கு 600 முதல் 700 மில்லியன் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 

அண்மையக் காலங்களில் தொடர்ச்சியாக பிறப்பிக்கப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக மது அருந்துதலில் குறைவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை சரிவு போன்ற பல்வேறு காரணிகளால் மது ஆலைகளை மூட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment