லசித் மாலிங்க அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு - w w w w w o என்றோ ஒரு நாள் எமது வீரர் இவ்வாறான ஓவரை வீசுவார்! - News View

Breaking

Tuesday, September 14, 2021

லசித் மாலிங்க அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு - w w w w w o என்றோ ஒரு நாள் எமது வீரர் இவ்வாறான ஓவரை வீசுவார்!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே டெஸ்ட் (Test), சர்வதேச ஒரு நாள் (ODI) போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த அவர், தொடர்ந்தும் IPL உள்ளிட்ட ரி20 (T20) தொடர்களில் விளையாடி வந்த நிலையில், தற்போது அதிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

கடந்த 17 வருடங்களாக தான் பெற்ற அனுபவம் தற்போது தேவையற்று போயுள்ளதால் தான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆயினும் கிரிக்கெட் தொடர்பில் ஆர்வம் கொண்ட மற்றும் அதன் மேல் உயிராக உள்ள இளம் தலைமுறையினருக்கு தான் தொடர்ந்தும் உதவுவேன் என உறுதியளித்துள்ளார்.

w w w w w o இவ்வாறான ஒரு ஓவரை எமது வீரர் ஒருவரே என்றோ ஒரு நாள் வீசுவார்! என அவர் தனது Facebook இடுகையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Sri Lanka Cricket, Mumbai Indians, Melbourne Stars, Rangpur Riders, Kent Cricket, Guyana Amazon Warriors, Maratha Arabians, Montreal Tigers ஆகிய அணிகளை விளையாடிய அவர் தனது இடுகையில் அவற்றை இணைத்துள்ளார்.


No comments:

Post a Comment