நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரபல மருத்துவமனையின் முதல் மாடியில் உள்ள கழிப்பறையிலேயே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த வைத்தியசாலையைச் சுற்றி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment