அவசரகால விதிமுறைகளை அமுல்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் : ஆதரவாக 132, எதிராக 51 வாக்குகள் - News View

Breaking

Monday, September 6, 2021

அவசரகால விதிமுறைகளை அமுல்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் : ஆதரவாக 132, எதிராக 51 வாக்குகள்

அவசரகால சட்ட விதிமுறைகளை அமுல்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசரகால விதிமுறைகளுக்கு ஆதரவாக 132 வாக்குகளும், அதற்கு எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அத்தியாவசிய உணவு விநியோகம் மற்றும் பதுக்கலை தடுப்பது தொடர்பான அவசரகால விதிமுறைகள் இன்று (06) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததோடு, அது தொடர்பான விவாதம் இன்று பிற்பகல் வரை இடம்பெற்று, அதற்கான வாக்களிப்பும் இடமபெற்றது.

ஜனாதிபதியினால் அண்மையில் இது தொடர்பில் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு தொடர்பான விதிமுறைகளே இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment