அரசுக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்கவே அவரசகால விதிமுறைகள் - முஜிபுர் ரஹ்மான் எம்.பி. - News View

Breaking

Monday, September 6, 2021

அரசுக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்கவே அவரசகால விதிமுறைகள் - முஜிபுர் ரஹ்மான் எம்.பி.

அரசாங்கம் அவரசகால ஒழுங்கு விதிகளை கொண்டு வந்திருப்பது அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்குவதற்காகுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்றுவரும் அவசரகால ஒழுங்கு விதிகள் மீதான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நாட்டில் தற்பாதும் தேவையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. விலை அதிகரித்து விற்பனை செய்யும் வியாபார நிலையஙகளை சுற்றிவளைத்து முத்திரையிட நடவடிக்கையை இன்றைக்கும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையே மேற்கொண்டு வருகின்றது.

அப்படியாயின் எதற்காக அவசரகால சட்டம்?. அரசாங்கத்தின் நடவடிகைகயால் இன்று மக்கள் விரக்தியடைந்திருக்கின்றனர். அதனால் மக்கள் அரசாங்கத்து எதிராக வீதிக்கிறங்குவதை அடக்குவதற்கே இந்த அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment