சிலாவத்துறை பகுதியில் 1,172 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு - 2 சந்தேகநபர்கள் கைது - News View

Breaking

Thursday, September 9, 2021

சிலாவத்துறை பகுதியில் 1,172 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு - 2 சந்தேகநபர்கள் கைது

சிலாவத்துறை, சவாரிபுரம் கடற்பிரதேசத்தை அண்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 1,172 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த மஞ்சள் தொகுதியை கொண்டு வந்த 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரையை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்டபோது அதில், 18 பொதிகளில் இருந்த 679 கி.கி. உலர்ந்த மஞ்சளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த கடற்கரை பகுதியில் மேற்கொண்ட மேலதிக சோதனையில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட நிலையிலிருந்த 13 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த மேலும் 493 கி.கி. மஞ்சளை கைப்பற்றியதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

அதற்கமைய, மொத்தமாக குறித்த இரு நடவடிக்கையிலும் 1,172 கி.கி. மஞ்சளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள், 24 வயதுடைய சிலாவத்துறை, சவாரிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவகர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுடன், குறித்த படகு மற்றும் மஞ்சள ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸாரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்டையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment