மீண்­டும் கொவிட் பரவல் அபா­யம், பொறுப்புடன் நடந்து கொள்க : சுகா­தார வழி­காட்­டல்­களை மீற வேண்டாம் என்றும் உலமா சபை கோரிக்­கை - News View

Breaking

Friday, August 6, 2021

மீண்­டும் கொவிட் பரவல் அபா­யம், பொறுப்புடன் நடந்து கொள்க : சுகா­தார வழி­காட்­டல்­களை மீற வேண்டாம் என்றும் உலமா சபை கோரிக்­கை

நாட­ளா­விய ரீதியில் மீண்டும் கொவிட்-19 தொற்றுப் பரவல் அதி­க­ரித்து வரு­வ­தாக புள்­ளி­வி­ப­ரங்­கள் கூறு­கின்ற நிலையில், முஸ்­லிம்கள் மிகவும் பொறுப்­பு­டன் நடந்­து கொள்ள வேண்டும் என அகில இல­ங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடு­த்­­துள்­ள­து.

நாட்டில் கொவிட்-19 தொற்று மிகத் தீவி­ர­மாக பரவி வரும் தற்­போ­தைய கட்­டத்தில் சுகா­தார வழி­காட்­டல்­களை சரி­யான முறையில் பின்­பற்­றி நடப்­பதும் மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, மரண வீடுகளிலும், திருமண வைபவங்களிலும் பொது இடங்களிலும் முஸ்லிம் சமூகம் மிகவும் பொறுப்­புடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வ­து, முகக்­க­வசம் அணிதல், அடிக்­கடி கைகளைக் கழு­வுதல், பௌதீக இடை­வெளி பேணுதல், அநா­வ­சி­ய­மாக வெளியில் செல்­லா­தி­ருத்தல் போன்ற விட­யங்­களில் நாம் மிகக் கவ­ண­மாக இருத்தல் வேண்டும்.

சுகா­தார அமைச்சின் 2021.07.28 ஆம் திக­திய தக­வலின் அடிப்­ப­டையில் வைத்­தி­ய­சாலை அனு­ம­திக்­கப்­படும் நோய­ளி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தோடு அவ­சர சிகிச்சைப் பிரி­வு­களில் இடப்­பற்றாக் குறையும் ஏற்­பட்­டுள்­ளது என்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

தற்­போது எமது அன்­றாட விட­யங்­களை மேற்­கொள்­வ­தற்கு நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. எனினும், சிலர் மரண வீடு­க­ளிலும், திரு­மண வைப­வங்­க­ளிலும், பொது இடங்­க­ளிலும் மேற்­படி தரப்­பட்­டி­ருக்கும் வழி­காட்­டல்­க­ளுக்கும் நிபந்­த­னை­க­ளுக்கும் மாற்­ற­மாக செயற்­ப­டு­கின்ற விடயம் அன்­றாடம் சுட்­டிக்­காட்­டப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வி­ட­யங்­களில் முஸ்லிம் சமூகம் மிகவும் பொருப்­புடன் நடந்து கொள்ள வேண்டும்.

அத்­துடன் சுகா­தார அமைச்சு, வக்பு சபை மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா ஆகி­யன வழங்­கி­யுள்ள வழி­காட்­டல்­களை மக்கள் பின்­பற்ற ஊக்­கு­விக்கும் வித­மா­கவும், கவ­ன­யீ­ன­மாக செயற்­படும் போது ஏற்­படும் விப­ரீ­தங்­களை எடுத்துக்காட்டியும் இவ்வார குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக அமைத்துக் கொள்ளுமாறு கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றோம் என்றும் அவ்­வ­றிக்­கையில் தெரிவிக்கப்­பட்­டுள்­ள­து.

இத­னி­டையே இலங்­­கையின் மொத்த கொவி­ட்-19 உயி­ரி­ழப்­பு­களில் முஸ்­லிம்­களிள் வீதம் 40 ஆக உயர்ந்­துள்­ள­தாக முஸ்லிம் கவுன்­சிலின் உப தலைவர் ஹில்மி அகமட் தெரி­வித்­துள்ளார். இலங்­கையில் 10 வீத­ சனத் தொகையைக் கொண்ட முஸ்­லிம்கள் கொவிட் மர­ணத்தில் 40 வீத­மாக உள்­ளமை மிகவும் கவ­லைக்­கு­ரிய விடயம் என­ச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர், சுகா­தார வழி­காட்­டல்­­களை இறுக்­க­மாகப் பின்­பற்­று­மாறும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளார்.

முஸ்­லிம்கள் மத்­தியில் நீரி­ழிவு, இதய நோய்­கள், உடல் பருமன் அதி­­க­ரிப்பு உள்­ளி­ட்ட தொற்றா நோய்கள் அதி­க­ரித்து காணப்­ப­டு­வதால் கொவிட் தொற்­றினால் மர­ணிக்கும் அபாயம் அதிகம் என சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர், பள்­ளி­வா­சல்கள் உள்­ளிட்ட இடங்­கயில் அதிகம் ஒன்­று­கூ­டு­வதை முடிந்­த­ளவு தவிர்த்து வீடு­களில் அமல்­களில் ஈடு­ப­­டு­வது சிறந்­தது என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

Vidivelli

No comments:

Post a Comment