ஆப்கானிஸ்தான் அரச ஊடகப்பிரிவு பணிப்பாளர் தலிபான்களால் படுகொலை - News View

About Us

About Us

Breaking

Friday, August 6, 2021

ஆப்கானிஸ்தான் அரச ஊடகப்பிரிவு பணிப்பாளர் தலிபான்களால் படுகொலை

ஆப்கானிஸ்தானின் அரசாங்க ஊடகப்பிரிவு மற்றும் தகவல் தொடர்பாடல் நிலையத்தின் பணிப்பாளர் Dawa Khan Menapal தலிபான் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக தலிபான்கள் கோழைத்தனமான செயலொன்றை மீண்டும் புரிந்துள்ளதுடன், தேசப்பற்றுள்ள ஒருரை கொன்றுள்ளதாக உள்விவகார அமைச்சின் பேச்சாளர் Mirwais Stanikzai தெரிவித்துள்ளார்.

Dawa Khan Menapal காபூலில் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அரச தரப்பு தகவல்களை அவர் தொடர்ச்சியாக ட்வீட் செய்து வந்தார். அவரை ட்விட்டரில் 1,42,000 பேர் பின் தொடர்கின்றனர்.

பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் தாக்குதல்களை மேற்கொண்ட அடுத்த நாள் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் தாக்குதல் மேற்கொண்ட தலிபான்கள், கார்க்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர். அரசாங்க தரப்பினர் மீது மேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை இன்று பகிரங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தலிபான்கள் தெற்கில் Kandahar, பொருளாதார முக்கியத்துவம் பெற்ற Herat, Lashkar Gar பிராந்தியங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கா உள்ளிட்ட கூட்டுப்படைகளின் வௌியேற்றத்தை தொடர்ந்து தலிபான்கள் அங்கு மீண்டும் தலைதூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment