உலகெங்கும் ஐந்து பில்லியன் தடுப்பூசிகள் பயன்பாடு - News View

Breaking

Thursday, August 26, 2021

உலகெங்கும் ஐந்து பில்லியன் தடுப்பூசிகள் பயன்பாடு

உலகெங்கும் ஐந்து பில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

2020 பிற்பகுதியில் தடுப்பூசி செலுத்துவது ஆரம்பிக்கப்பட்டு எட்டு மாதங்களிலேயே இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. 

எனினும் நாடுகளுக்கு இடையே தடுப்பூசி விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு தொடர்பில் உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. 

சர்வதேச தரவுகளின்படி கொவிட்-19 தொற்றுக்கு எதிராக உலக மக்கள் தொகையில் 25 வீதமானவர்கள் தற்போது முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். 33 மில்லியனுக்கு சற்று கூடுதலான தடுப்பூசிகள் தினசரி உலகெங்கும் வழங்கப்படுகின்றன.

இதில் மோல்டாவில் அதிகபட்சமாக மக்கள் தொகையில் 79.5 வீதத்தினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். தொடர்ந்து ஐஸ்லாந்து, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 75 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர். 

எனினும் ஹெய்ட்டி, யெமன், கொங்கோ மற்றும் சாட் நாடுகள் மிகக் குறைவான தடுப்பூசி பெற்ற நாடுகளாக உள்ளன. இங்கு மக்கள் தொகையில் 0.01 வீதத்திற்கு குறைவானவர்களே முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். 

ஏழை நாடுகளிடம் போதுமான தடுப்பூசி இல்லாத நிலையில் செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளை அதிகம் பெற்று நாட்டு மக்களுக்கு மூன்றாவது முறை கூடுதல் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்திருப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment