கொரோனா கொடிய நோயல்ல, அது சாதரண காய்ச்சல் என்கிறார் எஸ்.பி. திஸாநாயக்க - News View

Breaking

Thursday, August 26, 2021

கொரோனா கொடிய நோயல்ல, அது சாதரண காய்ச்சல் என்கிறார் எஸ்.பி. திஸாநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் என்பது கொடிய நோய் அல்ல, அது சாதரண காய்ச்சல். ஆகவே மக்கள் வீண் அச்சம் கொள்வது தவறானது. வீண் அச்சமே மரணத்தை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் வீண் அச்சம் கொள்வது தவறு. வீண் அச்சமே மரணத்தை ஏற்படுத்தும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவே கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாட்டை தொடர்ந்து முடக்குவது கொவிட் ஒழிப்புக்கு ஒரு தீர்வாக அமையாது, பலம் வாய்ந்த நாடுகள் கூட தற்போது சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

ஆகவே நாட்டு மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றினால் நாமும் வழமை நிலைக்கு திரும்பலாம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad