கல்முனை பிராந்தியத்தில் 163 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

கல்முனை பிராந்தியத்தில் 163 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா

(எம். என். எம். அப்ராஸ்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் இதுவரை 163 கர்ப்பிணி தாய்மார்கள் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ . சுகுணன் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிராந்தியத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் கொரானா நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், தற்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு உட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று காரணமாக 39 கர்ப்பிணி தாய்மார் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏனையவர்கள் பூரண சுகமடைந்துள்ளனர்.

இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் கொரோனா தொற்றால் கர்ப்பிணி தாய்மார் எவரும் உயிரிழக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment