தடுப்பூசி செலுத்திக் கொள்ளா விட்டால் கையடக்கத் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது : அதிரடி அறிவிப்பு..! - News View

Breaking

Saturday, August 7, 2021

தடுப்பூசி செலுத்திக் கொள்ளா விட்டால் கையடக்கத் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது : அதிரடி அறிவிப்பு..!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளா விட்டால் கையடக்கத் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை, பாகிஸ்தான் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அதிரடி அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இதுவரையில் 10,58,405 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 23,702 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,54,711 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதோடு, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று பாகிஸ்தான் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளா விட்டால் கையடக்கத் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது, ஹோட்டல்கள், வணிக வளாகங்களில் நுழைய அனுமதி இரத்து என அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்து நின்று அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment