இரு மாடி வீடொன்றில் தீ : தம்பதியினர் உயிரிழப்பு : மகளுக்கு ஒரு பையை வழங்கி சந்தோஷமாக வாழுமாறு அறிவுரை - News View

Breaking

Saturday, August 28, 2021

இரு மாடி வீடொன்றில் தீ : தம்பதியினர் உயிரிழப்பு : மகளுக்கு ஒரு பையை வழங்கி சந்தோஷமாக வாழுமாறு அறிவுரை

எம்.எப்.எம்.பஸீர்

கடவத்தை - எல்தெனிய, ஜனதா மாவத்தை பகுதியிலுள்ள இரு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

57 மற்றும் 53 வயதான இருவரே இவ்வாறு தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.20 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீ பரவல் ஏற்பட முன்னர், இரவு வேளையில் குறித்த தம்பதி, கீழ் மாடியில் வசிக்கும் தமது மகளை சந்தித்து ஒரு பையை வழங்கியுள்ளதாகவும், சந்தோஷமாக வாழுமாறு அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கடவத்தை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸாரும் களனி குற்றத் தடுப்புப் பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment