அன்று ஆப்கான் அமைச்சர்...! இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர் - News View

Breaking

Saturday, August 28, 2021

அன்று ஆப்கான் அமைச்சர்...! இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்

முன்னாள் ஆப்கான் அமைச்சர் சையத் அகமது ஷா சதாத் ஆசிய, அரபு நாடுகளில் உயர் அந்தஸ்து வகிக்கும் நபர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள தனது வாழ்க்கை உந்துதலாக இருக்கும் என்று கூறுகிறார்.

சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே தந்து கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னொரு வித்தியாச செய்தி. வெளிநாட்டுக்குத் தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கனி அரசில் அமைச்சராக பதவி வகித்த சையத் அகமது ஷா சதாத், தற்போது ஜெர்மனி நகரம் ஒன்றில் பீட்சா டெலிவரி நபராக வேலை பார்க்கிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அஷ்ரப் கனி அமைச்சரவையில் சதாத் இணைந்தார். தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகித்த அவர், பின்னர் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மனியின் லீப்சிக் நகருக்கு இடம் பெயர்ந்த சதாத், தற்போது அங்கு பீட்சா டெலிவரி நபராக பணியாற்றுகிறார். பீட்சா டெலிவரி பையுடன் அவர் சைக்கிள் ஓட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றிருக்கின்றன.

ஆனால் முன்னாள் ஆப்கான் அமைச்சர் சையத் அகமது ஷா சதாத் அலட்டிக் கொள்ளாமல், ஆசிய, அரபு நாடுகளில் உயர் அந்தஸ்து வகிக்கும் நபர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள தனது வாழ்க்கை உந்துதலாக இருக்கும் என்று கூறுகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad