அஹ்னாப் ஜஸீமை முதன் முறையாக தனிமையில் சந்தித்து கலந்துரையாடியுள்ள சட்டத்தரணிகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

அஹ்னாப் ஜஸீமை முதன் முறையாக தனிமையில் சந்தித்து கலந்துரையாடியுள்ள சட்டத்தரணிகள்

எம்.எப்.எம்.பஸீர்

''நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், முதன் முறையாக சட்டத்தரணிகள் அவரை தனிமையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அஹ்னாப் ஜஸீமை சந்திக்க அனுமதியளிக்குமாறு கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்ணான்டோ தலைமையிலான, யசந்த கோதாகொட மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவிட்ட நிலையிலேயே, நேற்று முன்தினம் இதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அஹ்னாப் ஜஸீமுடன் சுமார் இரண்டரை மணி நேரம் பல முக்கிய விடயங்கள் குறித்து சட்டத்தரணிகள் கலந்துரையாடியதாக, அஹ்னாபின் சட்டத்தரணி சஞ்சய் வில்சன் ஜயசேகர குறிப்பிட்டார்.

அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த காலப்பகுதியில் அஹ்னாபை சட்டத்தரணிகள் சந்திக்க அனுமதிக்கப்படும் 2 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

முன்னதாக அஹ்னாப் விளக்கமறியலில் வைக்கப்பட முன்னர், ரி.ஐ.டி. பொறுப்பில் இருந்த போது, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் சட்டத்தரனிகளை சந்திக்க ஒரு முறை அனுமதிக்கப்ப்ட்டிருந்தார். எனினும் பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையிலேயே அச்சந்திப்பு இடம்பெற்றிருந்தன.

இந்நிலையிலேயே உயர் நீதிமன்ற உத்தர்வின் பேரில் அஹ்னாப் ஜஸீமை, அவரது சட்டத்தரணிகள் முதன் முதலாக நேற்று முன்தினம் தனிமையில் சந்தித்து தேவையான ஆலோசனைகளைப் பெற்று கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த 2020 மே 16 அம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து வவுனியா ரி.ஐ.டி. கிளை பொறுப்பதிகாரியினால் அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment