லிட்ராே கேஸ் விலையும் அதிகரிக்கப்படும் என்கிறது நுகர்வோர் அதிகாரச பை - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

லிட்ராே கேஸ் விலையும் அதிகரிக்கப்படும் என்கிறது நுகர்வோர் அதிகாரச பை

எம்.ஆர்.எம்.வசீம்

லாப் கேஸ் விலை அதிகரிப்புக்கு நிகராக லிட்ராே கேஸ் விலையை அதிகரிக்குமாறு லிட்ராே கேஸ் நிறுவனம் கோரி இருக்கின்றது. அதன் பிரகாரம் விரைவில் விலை அதிகரிப்பு மேற்கொள்ள வேண்டி வரும். இல்லாவிட்டால் வழக்கு விசாரணைக்கு செல்ல வேண்டி வரும் என நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன தெரிவித்தார்.

லிட்ராே காஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு தெரிவித்து விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கேஸ் விநியோகம் தனி உரிமை சந்தைப்பங்கைக் கொண்ட இரண்டு நிறுவனங்களுக்கிடையில் இருப்பதால், ஒரு நிறுவனத்துக்கு கேஸ் விலையை அதிகரிப்பதற்கு அனுமதித்தால், மற்ற நிறுவனத்துக்கு அந்த வசதியை பெற்றுக் கொடுப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை கடமைப்பட்டிருக்கின்றது.

அதன் பிரகாரம் லாப் காஸ் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் லிட்ராே காஸ் 12.5 கிலாே கிராம் சிலிண்டர் 363 ரூபாவினாலும், 5 கிலாே கிராம் கொண்ட சிலிண்டரின் விலையை 145 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு இருக்கின்றோம். இன்னும் சில தினங்களில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்றார்.

No comments:

Post a Comment