பேச்சுவார்த்தை செவ்வாய்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், சுபோதினி குழுவின் அறிக்கையையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் - News View

Breaking

Sunday, August 15, 2021

பேச்சுவார்த்தை செவ்வாய்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், சுபோதினி குழுவின் அறிக்கையையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் அமைச்சரவை உப குழுவினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளைமறுதினம் செவ்வாய்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம். சுபோதினி குழுவின் அறிக்கையையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவித்தார்.

அமைச்சரவை உப குழுவினருக்கும், ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டத்தில் எமது சங்கத்துடன் பல தொழிற்சங்கத்தினர் ஒன்றினைணைந்துள்ளார்கள். நாம் அனைவரும் ஒரு கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளோம்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவினர் மூன்று தொழிற்சங்க தரப்பினருடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அழைப்பு விடுத்தார்கள்.

கூட்டணியாக ஒன்றிணைந்து செயற்படுவதால் அனைத்து தொழிற்சங்க தரப்பினரையும் சந்திப்பது அவசியம். ஆகவே அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம். நாளைமறுதினம் பேச்சுவார்த்தை இடம் பெறும் என எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad