சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் முறையாக பின்பற்றினால் தற்போதைய நிலையினை வெற்றி கொள்ள முடியும் - அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன - News View

About Us

About Us

Breaking

Sunday, August 15, 2021

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் முறையாக பின்பற்றினால் தற்போதைய நிலையினை வெற்றி கொள்ள முடியும் - அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் தாக்கத்தினை கருத்திற் கொண்டு நாட்டை மூடுங்கள் என ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டை மூடினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என பிறிதொரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். இவ்விடயங்களை ஆராய்ந்து அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் முறையாக பின்பற்றினால் தற்போதைய நிலையினை வெற்றி கொள்ள முடியும் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை முடக்குங்கள் என ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டை முடக்கினால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படும் என பிறிதொரு தரப்பினரும் குறிப்பிடுகிறார்கள்.இவ்விரு நிலையில் இருந்தும் தீர்மானங்களை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

நாட்டை முழுமையாக முடக்காமல் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எதிர்த்தரப்பினர் குறிப்பிடுவதை போன்று நாட்டை முழுமையாக முடக்கினால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. நாட்டு மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றினால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றி கொள்ள முடியும்.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களையும், அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் எதிர்த்தரப்பினர் செயற்படுகிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment