ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே கவனத்தில் கொள்ளப்படவுள்ள இலங்கை விவகாரம்..! - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே கவனத்தில் கொள்ளப்படவுள்ள இலங்கை விவகாரம்..!

(எம்.மனோசித்ரா)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் முதல் நாளில் இலங்கை குறித்து கவனத்தில் கொள்ளப்பட உள்ளது. மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர சிறப்புரிமைகள் கொண்ட அமைப்புகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. அன்றைய நிகழ்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அமர்வின் போது இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார்.

இலங்கை கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட், 30/1 தீர்மானத்திலிருந்து விலகியமை உள்ளிட்ட பல நடவடிக்கைகளினால் இலங்கை முழு அளவில் பொறுப்புக் கூறலுக்கான கதவுகளை அடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment