நியூசிலாந்தில் முடக்கநிலை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

நியூசிலாந்தில் முடக்கநிலை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிப்பு

நியூசிலாந்தில் டெல்டா கொரோனா வைரஸ் திரிபு ஒக்லாந்தில் இருந்து தலைநகர் வெலிங்டன் வரை வேகமாக பரவியுள்ள நிலையில் அந்நாட்டில் பொது முடக்க நிலை நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் தற்போதைய மூன்று நாள் முடக்க நிலை முடிவுக்கு வந்த நிலையில் அது மேலும் நான்கு நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் ஜெசின்டா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக நாட்டில் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகாத நிலையில் ஒக்லாந்து நகரில் மீண்டும் தொற்றுச் சம்பவம் ஒன்று அடையாளம் காணப்பட்டது. நோய் பரவலை கட்டுப்படுத்த நியூசிலாந்து தொடர்ந்து போராடுவதாக ஆர்டர்ன் தெரிவித்தார்.

‘இந்த டெல்டா பரவலின் முழு அளவு எமக்கு தெரியாதுள்ளது. எனவே, நாம் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டிருந்த நியூசிலாந்தில் தற்போது 31 நோய் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதில் மூவர் தலைநகர் வெலிங்டனில் அடையாளம் காணப்பட்டனர்.

No comments:

Post a Comment