போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச தின சித்திரம், கட்டுரைப் போட்டிகள் : தபாலில் அல்லது மின்னஞ்சலில் அனுப்ப முடியும் - News View

Breaking

Friday, August 20, 2021

போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச தின சித்திரம், கட்டுரைப் போட்டிகள் : தபாலில் அல்லது மின்னஞ்சலில் அனுப்ப முடியும்

போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு தேசிய அபாயகர ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் மாணவர்களுக்கிடையில் சித்திரம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

தரம் - 03, 04, 05 மாணவர்களுக்கான சித்திரப் போட்டி 'சிறுவர் நான் காணும் அழகான இலங்கை' எனும் தலைப்பில் இடம்பெற இருப்பதோடு 18” X 14” அங்குல கடதாசி பயன்படுத்தப்படல் வேண்டும் எனவும் தரம் - 06, 07, 08 மாணவர்கள் 'போதையற்ற மகிழ்ச்சியான குடும்பம்' என்ற தலைப்பிலும், தரம் - 09, 10, 11 மாணவர்கள் 'போதையற்ற வாழ்க்கையில் நட்பின் மகிழ்ச்சியை அனுபவிப்போம்' என்ற தலைப்பிலும் தரம் - 12,13 மாணவர்கள் 'போதையற்ற இளைஞர் சமூகத்தின் சக்தி' என்ற தலைப்பிலும் சித்திரங்களை அனுப்பலாம்.

கட்டுரைப் போட்டிகள் தரம் 6 முதல் 13 வரை மூன்று பிரிவுகளாக நடத்தப்பட இருப்பதோடு தரம் - 06,07,08 மாணவர்கள் 'போதையற்ற மகிழ்ச்சியான குடும்பம் எப்பொழுதும் குணப்படுத்தும் சக்தி தரும்', 'நல்ல பழக்கவழக்கங்கள் எமக்கான நாளைய சக்தி ஆகும்', 'சிறுவர் நாம் சேர்ந்து போதையற்ற அழகான உலகத்தினை உருவாக்குவோம்' ஆகிய தலைப்புகளில் 150-200 சொற்களுக்கு உட்பட்டதாக மும்மொழிகளிலும் ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும்.

தரம் - 09,10,11 மாணவர்கள் 'போதையற்ற பாடசாலை – மனவலிமையான மாணவர் சமூகம்', 'போதைக்கு எதிராக உள்ளத்துடன் கதைப்போம்', 'அறிவால் வெற்றி பெறுவோம் போதையை ஒழிப்போம்' ஆகிய தலைப்புகளில் 250 - 300 சொற்களுக்கு உட்பட்டதாக ஆக்கங்களை அனுப்பலாம். 

தரம் - 12,13 பிரிவு மாணவர்கள் 'உலகளாவிய போதைப் பொருள் பிரச்சினை இலங்கை மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விதம், 'போதைப்பொருள் முற்தடுப்பை பலப்படுத்த முறையான கல்வி முறை ஒன்றின் முக்கியத்துவம்', 'போதைப்பொருள் முற்தடுப்பில் ஊடகங்களின் பங்களிப்பு' ஆகிய ஒரு தலைப்பில் 350 சொற்களுக்கு உட்பட்டதாக கட்டுரைகளை அனுப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கங்களை கையெழுத்துப் பிரதியாகவோ அச்சுப் பிரதியாகவோ ஆக்கங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் சகல ஆக்கங்களும் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி தயாரித்து ஓகஸ்ட் 26ஆம் திகதிக்கு முன் பதிவுத் தபாலில் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை
இல. 383, கோட்டை வீதி
இராஜகிரிய

விலாசத்தில் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபைக்கு தபால் மூலமோ அல்லது

sme.nddcb@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

சகல ஆக்கங்களிலும் பெயர், தரம், பாடசாலை, தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி என்பன குறிப்பிடப்படல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆக்கங்கள் சுதந்திரமான நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்படுவதுடன் குறித்த ஆக்கங்கள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டு அங்கு கிடைக்கப்பெறும் விருப்புகளை அடிப்படையாக கொண்டு வெற்றிக்கான 25 வீத புள்ளிகள் தீர்மானிக்கப்படும் எனவும் அதிகார சபை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment