சீனியின் விற்பனை விலையை கட்டுப்படுத்துவது கடினம் : தீர்வு காண இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Saturday, August 28, 2021

சீனியின் விற்பனை விலையை கட்டுப்படுத்துவது கடினம் : தீர்வு காண இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை - அமைச்சர் பந்துல

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் தற்போது நாளுக்குநாள் அதிகரிக்கும் சீனியின் விற்பனை விலையை கட்டுப்படுத்துவது கடினமானது. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண சீனி இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், சீனிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட போது நாட்டில் 90,000 மெற்றிக் தொன் சீனி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் கடந்த வாரம் 115 ரூபாய் தொடக்கம் 130 ரூபா வரையில் காணப்பட்ட சீனியின் விற்பனை விலை தற்போது 210 தொடக்கம் 220 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

105 ரூபாவிற்கு விற்கப்பட வேண்டிய ஒரு கிலோ சீனியே தற்போது 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. சீனியின் விற்பனை விலை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

துறைமுகத்தில் தேங்கியுள்ள சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment