இலங்கையில் டெல்டாவின் ஆட்டம் ஆரம்பம், அடுத்த சில நாட்களில் கொடூரம் - எச்சரிக்கிறார் பேராசிரியர் சந்திம ஜீவன்திம - News View

About Us

About Us

Breaking

Friday, August 13, 2021

இலங்கையில் டெல்டாவின் ஆட்டம் ஆரம்பம், அடுத்த சில நாட்களில் கொடூரம் - எச்சரிக்கிறார் பேராசிரியர் சந்திம ஜீவன்திம

இலங்கையில் டெல்டா கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானதென பேராசிரியர், வைத்தியர் சந்திம ஜீவன்திம தெரிவித்துள்ளார்.

தற்போது தான் இலங்கையில் டெல்டா தொற்று ஆரம்பமாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் கொடூர தன்மை எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

விசேடமாக எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கது. வூஹான் மாறுபாட்டை விடவும் இரண்டு மடங்கு இது பரவும். 5 நொடிகளேனும் முகக் கவசத்தை அகற்றினால் அந்த காலப்பகுதியில் தொற்றாளர்களாகுவோம்.

இந்த சந்தர்ப்பத்தில் இந்த பரவலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் உணவை குறித்து சிந்திக்க முடியாது. உயிர்களை காப்பாற்றவே உடனடியாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment