காணாமல் போனோர் விவகாரத்தில் உண்மைத் தன்மையுடன் செயற்பட்டால் மாத்திரமே ஒரு தீர்வு காண முடியும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

காணாமல் போனோர் விவகாரத்தில் உண்மைத் தன்மையுடன் செயற்பட்டால் மாத்திரமே ஒரு தீர்வு காண முடியும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போனோர் விடயத்தில் தீர்வு காண முடியாது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் இதுவரை காலமும் இரு தரப்பினராலும் அரசியல் தேவைக்காக மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. காணாமல் போனோர் விவகாரத்தில் உண்மைத் தன்மையுடன் செயற்பட்டால் மாத்திரமே ஒரு தீர்வு காண முடியும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

யுத்த காலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையான தரவுகள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. ஒவ்வொரு தரப்பினரும் மாறுப்பட்ட வகையில் தரவுகளை சமர்ப்பித்துள்ளனர்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப் பெற வேண்டும். இதில் இன வேறுபாடுகள் பார்க்க கூடாது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்ற காலத்தில் இன்று வரை காணாமல் போனோர் தொடர்பில் பேசப்படுகிறதே தவிர உறுதியான தீர்வு எடுக்கப்படவில்லை.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்விடயத்திற்கு ஒரு போதும் தீர்வை பெற முடியாது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை இதுவரை காலமும் இரு தரப்பினரும் தங்களின் அரசியல் தேவைக்காக மாத்திரம் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

யுத்த காலத்தில் புலம் பெயர்ந்துள்ளவர்களும் தங்களின் ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு முன்வருவதில்லை. இவ்வாறான ஒரு சில விடயங்களும் காணாமலாக்கட்டோர் விவகாரத்தில் இழுபறி நிலையில் இருப்பதற்கு ஒரு காரணியாக உள்ளது.

காணாமலாக்கப்பட்டோரது உறவுகளுக்கு நியாயம் வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. தமது உறவுகளுக்கு என்னாயிற்று என்பதை அறிந்து கொள்ளும் உரிமை நீதி கேட்டும் போராடுபவர்களுக்கு உண்டு. ஆகவே காணாமல் போனோர் விடயத்தில் தீர்வு காண வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து ஒரு கொள்கைக்கமைய செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment