பி. சி.ஆர் 2 ஆயிரம் ரூபாவாகவும், அன்டிஜன் 600 ரூபாவாகவும் திருத்தி அரசாங்கம் வர்த்தமானி வெளியிட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

பி. சி.ஆர் 2 ஆயிரம் ரூபாவாகவும், அன்டிஜன் 600 ரூபாவாகவும் திருத்தி அரசாங்கம் வர்த்தமானி வெளியிட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தொற்று பரிசோதனைக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் தொடர்பிலான வர்த்தமானியை திருத்தி பி.சி.ஆர் பரிசோதனைக்கான புதிய விலை 2 ஆயிரம் ரூபா எனவும், அன்டிஜன் பரிசோதனைக்கான புதிய விலை 600 ரூபாய் எனவும் அரசாங்கம் வர்த்தமானி வெளியிட வேண்டும்.என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்கான குறைந்தபட்ச விலை தொடர்பில் அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பி.சி.ஆர் பரிசோதனைக்கான விலை 6500 ரூபாய் எனவும், அன்டிஜன் பரிசோதனைக்கான விலை 2000 ஆயிரம் ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பரிசோதனைகள் ஊடாக மாபியாக்கள் இருப்பதும், கொவிட் தாக்கத்தின் ஊடாக செல்வந்த தரப்பினர்கள் இலாபமடைந்து கொள்வதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

80 ரூபா பெறுமதியான அன்டிஜன் பரிசோதனை தனியார் வைத்தியசாலைகளில் 2000 தொடக்கம் 2500 ரூபாவிற்கு செய்யப்படுகிறது. நிவாரண அடிப்படையில் அன்டிஜன் பரிசோதனையை 600 ரூபாவிற்கும், பி.சி.ஆர் பரிசோதனையை 2 ஆயிரம் ரூபாவிற்கும் வழங்க முடியும். மக்களின் நிலையை கருத்திற் கொண்டு வெளியிட்டதாக குறிப்பிடப்படும் வர்த்தமானி அறிவித்தல் போலியானதாக காணப்படுகிறது.

தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மருந்துகளின் விலையை தான்தோன்றித்தனமாக தீர்மானிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய நெருக்கடியான நிலையில் மருந்து மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மாபியாக்களில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் மக்கள் வாழ்வா, சாவா என்று போராடும் போது அரசாங்கம் மருந்து மாபியாக்களுக்கு சார்பாக செயற்படுவது நாட்டு மக்களுக்கு இழைக்கும் துரோகமாக கருத வேண்டும்.

தேசிய ஒளடதங்கள் கண்காணிப்பு அதிகார சபையின் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மருந்து மாபியாக்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள், தேசிய ஒளடதங்கள் கண்காணிப்பு அதிகார சபை ஒன்றினைந்து முன்னெடுக்கும் சூழ்ச்சியாகவே இதனை கருத முடிகிறது. இவ்விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரியுள்ளோம்.

வர்த்தமானியை மீள் திருப்புவது அரசாங்கத்திற்கு பழக்கப்பட்ட விடயமாக உள்ளது. ஆகவே பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனை ஆகியவற்றிற்கான குறைந்தப்பட்ச விலைக்கான வர்த்தமானியை திருத்தி. பி.சி.ஆர் பரிசோதனைக்கான குறைந்தபட்ச விலை 2 ஆயிரம் எனவும், அன்டிஜன் பரிசோதனைக்கான குறைந்தப்பட்ச விலை 600 ரூபாய் எனவும் புதுpய வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment