இலங்கையில் தற்போது பரவும் டெல்டா வைரஸை விட மேலும் வீரியமிக்க மற்றுமொரு திரிபு பரவும் அபாயம் - News View

Breaking

Thursday, August 5, 2021

இலங்கையில் தற்போது பரவும் டெல்டா வைரஸை விட மேலும் வீரியமிக்க மற்றுமொரு திரிபு பரவும் அபாயம்

இலங்கையில் தற்போது பரவும் டெல்டா கொரோனா திரிபு வைரஸை விட மேலும் வீரியமிக்க மற்றுமொரு கொரோனா வைரஸ் திரிபு நாட்டில் பரவக்கூடிய எச்சரிக்கை நிலை காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மேற்படி நிறுவனம் புதிய கொரோனா வைரஸ் திரிபுகளை இனம் காண்பதற்கான ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment