இரு எம்.பிக்களுக்கு கொரோனா - News View

Breaking

Thursday, August 5, 2021

இரு எம்.பிக்களுக்கு கொரோனா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இரு எம்.பிக்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. ரோஹன திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது..

இதனையடுத்து, மாத்தளையில் உள்ள அவரது வீட்டில் அவர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. திலிப் வெத ஆரச்சிக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment