திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஆழுர் அலுவலகங்களுக்கு முஸ்லிம் எய்ட் இனால் கொவிட் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஆழுர் அலுவலகங்களுக்கு முஸ்லிம் எய்ட் இனால் கொவிட் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன

கொவிட்-19 அவசரகால நிலைமையைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் எய்ட் யூகே தலைமையகம் இலங்கையில் நாடளாவிய அளவில் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா அலுவகத்தினூடாக மேற்கொண்டு வருகின்ற மனிதநேய செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக, PP முவை எனப்படும் 160 கொவிட் பாதுகாப்பு அங்கிகள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய், கிண்ணியா, மூதூர் மற்றும் தம்பலகாமம் ஆழுர் அலுவலகங்களுக்கும் உப்பாறு பொலீஸ்-இராணுவ வீதித்தடை நிலைய அதிகாரிகளுக்கும் இன்று 21ம் திகதி வழங்கப்பட்டன. 

80 பாதுகாப்பு அங்கிகள் அடங்கிய மேலும் ஒரு தொகுதி பாதுகாப்பு அங்கிகள் சேருவில மற்றும் குச்சவெளி பிரதேச ஆழுர் அலுவலகங்களுக்கு 23ம் திகதி வழங்கப்படவுள்ளன.

ஆழுர் அலுவலகங்களுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச்சுகாதார அதிகாரிகள் மேற்படி பாதுகாப்பு அங்கிகள் அடங்கிய பொதிகளைப் பெற்றுக் கொண்டதுடன், இன்றைய அவசிய தேவையாகவுள்ள இந்த உதவிக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர், இக் கையளிப்பு நிகழ்வில் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மேற்படி பிரதேசங்கள் அண்மைக்காலங்களில் கொவிட் நோய்த் தாக்கத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் அதிக உயிரிப்புகளையும் சந்தித்த ஊர்களாகும்.

No comments:

Post a Comment