சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதச் சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானம் - News View

Breaking

Saturday, August 21, 2021

சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதச் சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானம்

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஏகனதமாக அனுமதி வழங்கியுள்ளது.

1300 சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கொவிட் நிதியத்திற்கு தங்களால் இயலுமான அளவு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இணைய வழியுடாக ஊடாக நடைபெற்றது. சுதந்திர கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பமானது.

சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த யோசனைக்கு அமைய சுதந்திர கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் மாதச் சம்பளத்தை கொவிட்-19 நிதியத்திற்கு வழங்க செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment