சிச்சுவான் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 80,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன.
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழை பெய்ததைத் தொடர்ந்து மாகாணத்தின் முக்கிய ஆறுகளில் நீர் நிலைகள் எச்சரிக்கை அளவை விட அதிகமாக இருந்தன.
டாஜோ நகரத்தில் உள்ள ஒரு நீர்த் தேக்கம் அதன் வெள்ள வரம்பை விட 2.2 மீட்டர் தாண்டியதாக அதிகாரப்பூர்வ சீன செய்தி சேவை தெரிவித்துள்ளது.
மாகாணம் முழுவதும் ஆறு நகரங்களில் 440,000 க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறித்த செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
வெள்ளம் சிச்சுவானில் ஏற்கனவே 250 மில்லியன் யுவான் (38.57 மில்லியன் அமெரிக்க டொலர்) பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், 45 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 118 கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அரச ஒளிபரப்பான CCTV சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், மத்திய சீன மாகாணமான ஹெனான், வரலாறு காணாத மிக மோசமான மழையை சந்தித்தது, 19 அரச வானிலை கண்காணிப்பு நிலையங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தினசரி மழையைப் பதிவு செய்தன.
வெள்ளம் 300 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது, பெரும்பாலும் மாகாண தலைநகர் ஜெங்ஜோவில், ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒரு வருட மழைய கொட்டித் தீர்த்ததாக சீனாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment