விசேட அதிரடிப் படையினரால் 600 போலி 500 ரூபா நாணயத்தாள்களுடன் மூவர் கைது - News View

Breaking

Tuesday, August 31, 2021

விசேட அதிரடிப் படையினரால் 600 போலி 500 ரூபா நாணயத்தாள்களுடன் மூவர் கைது

சீதுவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சிறப்பு நடவடிக்கையில் 600 போலி 500 ரூபா நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லியானகே முல்ல, வீரகுல அங்கம்பிட்டிய பகுதிகளிலேயே இந்த சிறப்பு நடவடிக்கை‍ நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களை நேற்று (30) பிற்பகல் லியானகே முல்ல பகுதியில் தடுத்து நிறுத்தி சோதனையிடப்பட்டபோது 60 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாக வீரகுல அங்கம்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டபோது ‍மேலும் 540 போலி 500 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21, 43 மற்றும் 45 வயதுடைய ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கைதின்போது சந்தேக நபர்களிடமிருந்து போலி நாணய அச்சிடும் இயந்திரம், மடிக்கணினி, கணினி மற்றும் பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment