கந்தளாயில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை : 56 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, August 28, 2021

கந்தளாயில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை : 56 பேருக்கு கொரோனா

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தில் கொரோனா தொற்றுடன் தொடர்புடையவர்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகார் தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தில் இதுவரை ஐம்பது பேர் வரை தொற்றுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகாளை முன்னெடுத்து வருவதாகவும் பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

கந்தளாய் அக்போபுர வான் எல வட்டுகச்சி மற்றும் பேராறு போன்ற பகுதியிலிருந்து பொதுமக்கள் தாமாக முன்வந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் சென்று அன்டிஜன் பரிசோதனைகளை பரிசோதித்து செல்வதை காணக்கூடியதாக இருந்தது.

No comments:

Post a Comment