வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்களினால் 2000 கிலோ கோழி இறைச்சி எரித்தழிப்பு..! - News View

About Us

About Us

Breaking

Saturday, August 7, 2021

வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்களினால் 2000 கிலோ கோழி இறைச்சி எரித்தழிப்பு..!

குளிர்பதன் வெப்பநிலை, போதுமானளவு இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோ கிராம் கோழி இறைச்சி நேற்று எரித்தழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

வட பகுதியில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் நேற்று (06.08.2021) சோதனைக்குட்படுத்திய வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த வாகனத்தில் போதியளவு குளிரூட்டி இன்மையால் இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, அவற்றை கைப்பற்றி நீதிமன்றத்தில் குறித்த பொருட்களை ஒப்படைத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சுமார் 2,000 கிலோ கிராம் கோழி இறைச்சியை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், குறித்த இறைச்சி பாவனைக்கு உதவாது என நீதிமன்றத்தினால் உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம் மாலை வவுனியா பாவற்குளம் மக்கள் குடிமனைகள் இல்லாத பகுதியில் உள்ள பொது இடத்தில் கோழி இறைச்சி தீ வைத்து எரித்தழிக்கப்பட்டது.

வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment