அதிகபட்ச கட்டணத்தை மீறினால் 1917 க்கு அழைத்து முறையிடவும் - News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, August 15, 2021

demo-image

அதிகபட்ச கட்டணத்தை மீறினால் 1917 க்கு அழைத்து முறையிடவும்

Phone2
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கான அதிகபட்ச கட்டணத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பி.சி.ஆர் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 6,500 ரூபா மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 2,000 ரூபாவாக விலைக்கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக் கட்டணம், நேற்று முன்தினம் மாலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், இந்த பரிசோதனைகளுக்கு இதற்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்படால், 1917 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *