மத்திய மாகாணத்தில் 16 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பு மருந்தேற்றப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Monday, August 16, 2021

மத்திய மாகாணத்தில் 16 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பு மருந்தேற்றப்பட்டுள்ளது

மத்திய மாகாணத்தில் 16 லட்சத்து 5 ஆயிரத்து 821 பேருக்கு இதுவரை கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக விஷேட வைத்திய அதிகாரி சுரங்க பெர்னாந்து தெரிவித்துஎள்ளார்.

இதில் கண்டி மாவட்டத்தில் மட்டும் 8 லட்சத்து மூவாயிரத்து 89 நபர்களுக்கும் மாத்தளை மாவட்டத்தில் 2லட்சத்து 92 ஆயிரத்து 793 நபர்களுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 3லட்சத்து 57 ஆயிரத்து 495 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாவது தடுப்பூசியை 2லட்சத்து 12ஆயிரத்து 444 நபர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். அவர்களில் கண்டி மாவட்டத்தில் 13ஆயிரத்து 189 நபர்களுக்கும் மாத்தளை மாவட்டத்தில் ஒரு லட்சத்து முப்பது ஆயிராயிரத்து 484 நபர்களுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 68ஆயிரத்து ஆயிரத்து 771 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பார்க்கின்ற பொழுது இதுவரை கண்டி மாவட்டத்திற்கு 8 லட்சத்து 16ஆயிரத்து 278 தடுப்பூசிகளும் மாத்தளை மாவட்டத்திளற்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 277 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் கண்டி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நபர்கள் ஸ்பூட்னிக் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.தற்போது 15 ஆயிரம் ஸ்பூட்னிக் தடுப்பூசிகள் கிடைத்துள்ளது.

அவற்றை எதிர்வரும் வாரங்களில் கண்டி மாவட்டத்தில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் கண்டியிலுள்ள மக்களுக்கு ஒரு தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் நாம் செயற்படுகின்றோம். அந்த வகையில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள விரும்புவோர் வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களை பெற்று முறையாக பூர்த்தி செய்து தங்களது விருப்பத்தினை தெரிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.

மேலும் கண்டி மக்களுக்கு இரண்டாவது தடுப்பூசி இல்லாமல் போய்விடுமோ என்ற பீதியும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. வெகுவிரைவில் ஸ்பூட்னிக் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது 15 ஆயிரம் தடுப்பூசிகள் மாத்திரமே உள்ளது. எதிர்வரும் காலங்களில் பற்றாக்குறையாக இருக்கும் ஸ்பூட்னிக் தடுப்பூசியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விஷேட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

(கினிகத்தேனை நிருபர்)

No comments:

Post a Comment