காத்தான்குடியில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை பள்ளிவாயல்கள் மூடப்படும் : கொவிட் தடுப்புச் செயலணி அவசரக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றம் - News View

About Us

About Us

Breaking

Monday, August 16, 2021

காத்தான்குடியில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை பள்ளிவாயல்கள் மூடப்படும் : கொவிட் தடுப்புச் செயலணி அவசரக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றம்

எம்.எஸ்.எம்.நூருதீன் 

தற்போது நமது ஊரின் கொரோனா நிலமை தொடர்பிலும் நாட்டில் வேகமாகப் பரவி வரும் 'டெல்டா' திரிபு தொடர்பிலும் 16/08/2021 இன்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய அவசரக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டக்களப்பு மாவட்டத்தில் கெரோனா பரவல் நிலைமை மிகத் தீவிரமாக காணப்படுவதாலும் நமது ஊரில் தற்போது நிலமை நாளுக்குநாள் மோசமாகி வருவதாலும் மரண வீதங்கள் அதிகரிப்பதாலும் மேற்படி தீர்மானங்கள் அவசியம் கடைப்பிடிப்பதோடு பொதுமக்கள் அவதானத்துடனும் சமூகப் பொறுப்புடனும் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

1. இன்று முதல் அமுல்படுத்தப்பட இருக்கும் இரவு 10 மணி தொடக்கம் 4 மணிவரையான ஊரடங்கு சட்ட நேரத்தில் பார்மசி உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படல் வேண்டும்.

2. திருமணம், வலீமா போன்ற சகல நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படல் வேண்டும்.

3. தேசிய, மாவட்ட கெரோனா தடுப்பு செயலணியின் தீர்மானங்களுக்கு அமைவாக இன்று முதல் பள்ளிவாயல்களுக்கு தொழுகைக்காக பொதுமக்கள் வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை பள்ளிவாயல்கள் மூடப்படவேண்டும்.

4. இன்று முதல் உணவகங்களில் 'Take Away' மாத்திரம் அனுமதிக்கப்படுவதுடன் எக்காரணம் கொண்டும் எவரும் உள்ளிருந்து உணவருந்த அனுமதிக்க வேண்டாம்.

5. பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர், பெற்றோர் அல்லது ஆசிரியர் ஒன்று கூடல்களை ஏற்பாடு செய்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட வேண்டும்.

6. கடற்கரை ஆற்றங்கரை போன்ற பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவது மறு அறிவித்தல்வரை தடை செய்யப்பட்டுள்ளது.

7. பொதுச்சந்தை, வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் உரிய சுகாதார நடைமுறைகள் பேணப்படாமை அவதானிக்கப்படுமிடத்து அவற்றுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு தேவை ஏற்படின் மேற்படி இடங்கள் 14 நாட்களுக்கு மூடப்படும்.

8. PCR மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மக்கள் கூடியிருக்கும் இடங்கள் மற்றும் கடைத்தெருக்கள் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக நடைபெறும்.

நன்றி
இவ்வண்ணம்
காத்தான்குடி நகருக்கான கொவிட்–19 தடுப்பு செயலணிக்காக,
SHM அஸ்பர் JP UM
நகர முதல்வர், நகரசபை, காத்தான்குடி

No comments:

Post a Comment