இறப்பு எண்ணிக்கை ஒரு நாளில் 150 ஆக உயரும், இரு வார ஊரடங்கை அமுல்படுத்தவும் : பேராசிரியர் சுனெத் அகம்பொடி - News View

About Us

About Us

Breaking

Saturday, August 7, 2021

இறப்பு எண்ணிக்கை ஒரு நாளில் 150 ஆக உயரும், இரு வார ஊரடங்கை அமுல்படுத்தவும் : பேராசிரியர் சுனெத் அகம்பொடி

(சி.எல்.சிசில்)

நாட்டில் கொவிட் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை ஒரு நாளில் 200-300 ஆக அதிகரிப்பதைத் தடுக்க இரு வார காலத்துக்கு ஊரடங்கை அமுல்படுத்த வேண்டும் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையின் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்தார்.

இன்னும் இரு வாரங்களில் மரண எண்ணிக்கை 150 ஆக உயரும் என பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க, அனைத்து நோயாளர்களையும் வைத்தியசாலைகளில் சேர்ப்பதை துரிதப்படுத்த வேண்டும், வீட்டு சிகிச்சை, நோயாளிகளின் போக்குவரத்து மற்றும் அவசர சேவைகள் போன்ற சேவைகளை வழங்க ஒரு சரியான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றார்.

இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க இரு வார காலத்துக்கு 100 சதவீத ஊரடங்கை அமுல்படுத்த வேண்டும் என பேராசிரியர் சுனெத் அகம்பொடி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment