இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரின் உத்தரவுக்கமையவே நான்கு உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, August 7, 2021

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரின் உத்தரவுக்கமையவே நான்கு உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் முன்னாள் தலைவர் ஜகத் விக்­ர­ம­சிங்­கவின் உத்­த­ரவின் பிர­கா­ரமே நான்கு உல­மாக்­களின் உரை­களை இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னம் முஸ்லிம் சேவையில் ஒலி­ப­ரப்ப தடை விதிக்­கப்­பட்­டது என அதன் பணிப்­பாளர் நாயகம் சந்­தி­ரப்­பால லிய­னகே தெரி­வித்தார்.

“குறித்த உத்­த­ர­விற்­க­மைய கடந்த 2020.12.04ஆம் திகதி முதல் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல், அஷ்ஷெய்க் முர்சித் முழப்பர், அஷ்ஷெய்க் அப்துல் ஹாலீக் மற்றும் அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனீபா ஆகி­யோரின் உரை­களை ஒலி­ப­ரப்­பவே இந்த தடை விதிக்­கப்­பட்­டது” எனவும் அவர் குறிப்­பிட்டார்.

எனினும் நிகழ்ச்­சி­க­ளுக்கு இந்தத் தடை பொருந்­தாது என அவர் குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும், “இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னம் முஸ்லிம் சேவையின் நிகழ்ச்­சி­களில் அஷ்ஷெய்க் யூசுப் முப்தி தற்­போது பங்­கேற்­கின்றார்” என பணிப்­பாளர் நாயகம் மேலும் தெரி­வித்தார்.

இந்த தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட போது முஸ்லிம் சேவையின் பொறுப்­பா­ள­ராக செயற்­பட்­டவர், தற்­போது இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் பயிற்சி மற்றும் ஆய்வு பிரிவின் விரி­வு­ரை­யா­ள­ராக செயற்­ப­டு­கின்றார். இவ­ருக்­கான இந்த நிய­மனம் கடந்த ஜன­வரி 7ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னம் முஸ்லிம் சேவையில் சில உல­மாக்­களின் உரை­களை ஒலி­ப­ரப்ப தடை விதிக்­கப்­பட்­டமை தொடர்பில் கடந்த மார்ச் 3ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தகவல் அறியும் விண்­ணப்­பத்­திற்கு கடந்த ஜுலை 19ஆம் திகதி அதன் பணிப்­பாளர் நாயகம் சந்­தி­ரப்­பால லிய­ன­கே­யினால் வழங்­கப்­பட்ட பதி­லி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, குறித்த தடையின் தற்­போ­தைய நிலை தொடர்பிலும் இந்த தடை தொடர்கிறதா அல்­லது இல்­லையா என தகவல் அறியும் விண்­ணப்­பதில் வின­வி­ய­தற்கு, “நியா­ய­மா­னது, ஆனால் சரி­யா­ன­தல்ல” என முஸ்லிம் சேவையின் உதவிப் பணிப்­பா­ள­ராக கடந்த ஜன­வரி 7ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்ட பெண்­மணி பதில் வழங்­கி­ய­தாக தகவல் அறியும் விண்­ணப்­பத்­திற்­கான பதிலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் கடந்த வெள்ளிக்­கி­ழமை (ஓகஸ்ட் 30) கொள்­ளுப்­பிட்டி பள்­ளி­வா­சலில் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் நிகழ்த்­திய குத்பா பிர­சங்கம், இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னம் முஸ்லிம் சேவையில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தலைவராக செயற்பட்ட ஜஹத் விக்ரமசிங்க, கடந்த மார்ச் மாதம் குறித்த பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார்.

Vidivelli

No comments:

Post a Comment