இலங்கையில் 117 பேருக்கு டெல்டா தொற்று - News View

Breaking

Friday, August 6, 2021

இலங்கையில் 117 பேருக்கு டெல்டா தொற்று

டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளான 117 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் டெல்டா பிறழ்வு வேகமாக பரவுவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் தலைவர், கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.

அதற்கமைய, கடந்த ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் கொழும்பில் பதிவாகிய தொற்றாளர்களில் 19.3 வீதமானவர்கள் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை ஜூலை மாதத்தின் இறுதி வாரம் வரையான காலப்பகுதியில் 75 வீதமாக அதிகரித்துள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.

இது குறித்த அறிக்கையை நாளைய தினத்திற்குள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment