இலங்கையில் திருமணம், மரண வீட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு - News View

Breaking

Friday, August 6, 2021

இலங்கையில் திருமணம், மரண வீட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு

தற்போதுள்ள கொரோனா பரவலின் அதிகரிப்பைத் தொடர்ந்து, அனைத்து விழாக்கள் மற்றும் மரணச் சடங்குகள் தொடர்பில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் (06) இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய, 500 பேர் கொள்ளவு கொண்ட திருமண மண்டபங்களில் உச்சபட்சம் 150 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

500 இற்கும் குறைவான கொள்ளவைக் கொண்ட அரங்குகளில் 100 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து அரச விழாக்களையும் செப்டெம்பர் 01ஆம் திகதி வரை ஒத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மரண வீடுகளில் ஒரே தடவையில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment