Sinovac தடுப்பு மருந்தின் செயல்திறன் குறைவு - ஆய்வில் தகவல் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

Sinovac தடுப்பு மருந்தின் செயல்திறன் குறைவு - ஆய்வில் தகவல்

Sinovac நிறுவனத்தின் COVID-19 தடுப்பு மருந்தின் செயல்திறன், காமா (Gamma) வகைக் கிருமிக்கு எதிராகக் குறைவாய் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அந்தத் தடுப்பு மருந்தால் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்திப் புரதம், காமா வகைக் கிருமிக்கு எதிராகக் குறைவான ஆற்றலையே கொண்டிருப்பதாக, Lancet Microbe இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வு தெரிவித்தது.

அதனால், தடுப்பூசி போட்டவர்களையும் அது பாதிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை அதிகமாகக் கொண்டுள்ள வட்டாரங்களிலும்கூட, அந்தக் கிருமி பரவலாம் என்று கூறப்படுகிறது. காமா, முதன்முதலில் பிரேசிலில் கண்டறியப்பட்டது. அங்கு, Sinovac தடுப்பு மருந்து அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காமா வகைக் கிருமி, ஏற்கனவே கிருமித் தொற்று கண்டறியப்பட்டோரை மீண்டும் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment