முஸ்லிம்களின் சிவில் இயக்கங்களுடன் ஜனாதிபதி பேசுவாரா? - News View

About Us

About Us

Breaking

Thursday, July 15, 2021

முஸ்லிம்களின் சிவில் இயக்கங்களுடன் ஜனாதிபதி பேசுவாரா?

இரு வாரங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ தமிழ் கூட்­டணித் தலைவர்களுடன் பேச்­சு­வார்த்தை நடத்த அழைப்பு விடுத்­த­மையும், அந்த அழைப்பு உட­ன­டி­யான வாபஸ் பெறப்பட்டமையும், அப்­பேச்­சு­வார்த்தை கால­வ­ரையறை­யின்றி பிற்போ­டப்­பட்­ட­மையும் யாவரும் அறிந்­ததே. 

தென் இலங்­கை­யிலே அவரின் அழைப்­புக்கு எதி­ராக எழுந்த எதிர்ப்பே இத்­த­னைக்கும் காரணம் என்­பதும் இப்­போது தெளிவாகின்­றது. 

இந்த அழைப்பின் பின்­னணி என்ன? அவ்­வா­றான ஓர் அழைப்பு முஸ்லிம் தலைவர்களுக்கும் அனுப்­பப்­ப­டா­தது ஏன்? இவை­பற்றி முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு என்ன? இக்­கேள்­வி­க­ளுக்கு சுருக்­க­மான விடை­களை ஆராய்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம். அதற்கு முன்னர் சில விட­யங்­களைப் பின்­ன­ணி­யாக விளக்க வேண்டியுள்ளது.

ஆட்டம் காணும் அரசு
இலங்­கையின் ராஜ­பக்ஷாக்­களின் அரசு ஆட்­டம்­ காணத் தொடங்கியுள்­ளது. அதன் சட்­டப்­ப­டி­யான ஐந்து வருட ஆயுள் முற்­றாக நீடிக்­குமா அல்­லது விரைவில் குன்­றி­வி­டுமா என்ற சந்­தேகம் இப்போது வலு­வ­டை­கின்­றது. 

அறுதிப் பெரும்­பான்மை வாக்­கு­க­ளுடன் பத­விக்­கு ­வந்த ஓர் அரசாங்கம் இவ்­வ­ளவு குறு­கிய காலத்­துக்குள் இந்த நிலைக்குத் தள்ளப்­பட்­டமை சுதந்­திர இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் இதுவே முதல் தடவை.

ஒரு பக்­கத்தில் தொற்று நோயின் நெருக்­க­டி மறு­பக்­கத்தில் பொருளா­தா­ரத்தின் சீர­ழி­வு இன்­னொரு பக்­கத்தில் அர­சாங்­கத்தின் வெளி­நாட்டுக் கொள்­கையில் ஏற்­பட்­டுள்ள தலை­யி­டி இத்தனைக்கும் மத்­தியில் அரசின் பங்­கா­ளிக் ­கட்­சி­களின் சூழ்ச்சிகளும் பய­மு­றுத்­தல்­களும், என்­றவாறு நாலாபக்கங்களிலுமிருந்து இந்த ஆட்­சியின் நிலைப்­பாடு ஆட்டம் கண்­டுள்­ளது. 

நெருக்­க­டிகள் பெரு­கி­னாலும் மக்­களின் ஆத­ரவு ஓர் அர­சுக்கு இருக்கும்­ வரை அந்த அரசை யாருமே அசைக்க முடி­யாது. ஆனால், இன்­றைய நிலையில் வறு­மையும் பசியும் பட்­டி­னியும் இலட்சக்கணக்­கான குடும்­பங்­களை வாட்டி வதைக்­கின்ற நிலையில் அந்த ஆத­ரவை இந்த அரசு வெகு­வாக இழந்து விட்­ட­தென்றே கூறவேண்டும்.

சில தினங்­க­ளுக்­கு முன் ஜனா­தி­பதி பொது­மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் நாட்டின் எதிர்­கால சுபீட்­சத்­தைப் ­பற்­றிய அவ­ரது கனவுகளை வழ­மைபோல் விப­ரித்து, அவற்றை அடைய இது­வரை அவர் ஈட்­டிய வெற்­றி­க­ளையும் சுட்­டிக்­காட்டி இறு­தி­யாக இன்­றுள்ள பிரச்­சி­னை­க­ளுக்­கு­ரிய முழுப் பழி­யையும் தொற்று நோயின்மேல் சுமத்­தி­யதை அவ்­வு­ரையைக் கேட்டோர் உணர்ந்திருப்பர். சுருக்கமாகக் கூறின் இது மக்­களை ஏமாற்­றிய ஓர் உரை.

தொற்று அரசின் அரண்
கொவிட் தொற்று இலங்­கையில் மட்டும் பர­வ­வில்லை. அது ஓர் உலகளா­விய பிணி. ஆனால் ஏனைய நாடு­களின் அர­சுகள் தொற்றுநோய் மருத்­துவ நிபுணர்களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு மதிப்ப­ளித்து அந்த நோயைக் கட்­டுப்­ப­டுத்தும் வழி­வ­கை­களை அவர்களி­டமே சுமத்தி அத்­துடன் பொரு­ளா­தாரத் தாக்­கங்­க­ளையும் மட்­டுப்­ப­டுத்தி பெரு­ம­ளவு வெற்­றி­காண, இலங்­கையின் ஆட்சியாளர்களோ நிபுணர்களின் ஆலோ­ச­னை­களைப் புறந்­தள்ளி, மருத்­துவ தொழிற்­சங்கத் தலைவர்களுக்கும் போலிப் பரிகாரிகளுக்கும் மந்­தி­ர­வா­தி­க­ளுக்கும் முத­லிடம் வழங்கி, நோயைக் கட்­டுப்­ப­டுத்தும் பொறுப்­பையும் இரா­ணு­வ மயப்படுத்திய­தனால் இன்று அந்த நோய் தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்­கி­றது. 

அதனால் நாட்டின் பொரு­ளா­தாரம் சீர்­கு­லைந்து, மக்­களின் தொழில் வாய்ப்­புகள் குறைந்து, வரு­மா­ன­மி­ழந்து, விஷம்போல் ஏறும் விலைவா­சிக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் இலட்­சக்­க­ணக்­கான குடும்­பங்கள் பிச்­சைப்­பாத்­திரம் ஏந்தும் அள­வுக்கு வறுமை நாட்டைப் பீடித்­துள்­ளது. 

நோயைக் கட்­டுப்­ப­டுத்தி அதேவேளை பொரு­ளா­தாரப் பாதிப்­பையும் குறைக்­கக்­கூ­டிய ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட திட்­ட­மொன்றை ஆரம்பத்தி­லி­ருந்தே வகுக்­கா­தது அர­சாங்­கத்தின் குற்­ற­மே­யன்றி நோயின் குற்­ற­மல்ல. இந்தக் குறை­பாட்­டுக்கு மத்­திய வங்­கியின் காவலர்களும் ஒரு காரணம்.

கொவிட் நோய் உண்­மை­யி­லேயே ராஜ­பக்ஷ அரசின் பாது­காப்­புக்கு ஓர் அரணாய் விளங்­கு­கி­றது. ஏனெனில் அதுதான் ஆட்­சி­யாளர் மேல் வெறுப்­ப­டைந்­துள்ள மக்­களை வீதி­க­ளி­லி­றங்கி ஆர்ப்­பாட்­டங்கள் செய்­ய­வி­டாமல் தடுத்துக் கொண்­டி­ருக்­கி­றது. 

இந்த ஆட்­சி­யாளர்களின் பொரு­ளா­தாரக் கொள்­கை­களின் சீர்கேடுகளை விரி­வாக ஆராய்­வ­தானால் இக்­கட்­டுரை மிகவும் நீண்டு­விடும். ஏனெனில் அந்தக் கொள்­கை­களின் வர­லாற்றை மகிந்த ராஜபக்ஷ ஜனா­தி­ப­தி­யா­கிய காலத்­தி­லி­ருந்தே ஆரம்­பிக்க வேண்­டி­யுள்­ளது. 

சுருக்­க­மாகக் கூறு­வ­தானால் கடன்­பட்டு நடத்­திய போரும், அபிவிருத்தி என்ற பெயரில் விர­ய­மாக்­கப்­பட்ட பணமும், ஊழல் மோச­டி­களும் ஒருங்­கி­ணைந்து தேசத்தைக் கடன்­ சு­மைக்குள் தள்ளி அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளைக்­கூட இன்று நிறை­வேற்ற வசதி இல்லாத ஒரு நாடாக இலங்­கையை மாற்­றி­யுள்­ளது.

வெளி­நாட்டுக் கொள்­கையால் விளைந்த விப­ரீதம்
சுதந்­திர இலங்­கையின் வெளி­நாட்டுக் கொள்கை நீண்­ட­ கா­ல­மாக, அதா­வது ராஜ­பக்ஷாக்­களின் ஆட்­சிக் ­கா­லம்­வ ரை, அணி­சேராக் கொள்­கை­யா­கவே இருந்­துள்­ளது. 

முத­லா­ளித்­துவக் கொள்­கை­யு­டைய ஐக்­கிய தேசியக் கட்சி அமெரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­ல­குடன் கொள்­கை­ய­ளவில் நெருங்கி இருந்­த­போதும், அதே­போன்று சோஷ­லிசச் சார்­பு­டைய சுதந்­திரக் கட்சி இட­து­சாரி நாடு­க­ளுடன் நட்­பு­றவு கொண்டாடயபோதும், நாட்டின் வெளி­நாட்டுக் கொள்­கையை அப்போது உலகை அச்­சு­றுத்தி வளர்ந்த பனிப்­போரில் எந்த ஓர் அணிக்கும் அந்த இரு ­கட்­சி­களும் ஈடு­வைக்­க­வில்லை. அதனால் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் நாடு நன்மை அடைந்­தது. 

1976 இல் கொழும்பில் வெகு கோலா­க­ல­மாக நடை­பெற்ற அணி­சேரா நாடு­களின் சர்வதேச மகா­நா­டையும் இந்த நடு­நிலைமைக் கொள்கைக்குக் கிடைத்த ஒரு பரிசு என்றே கரு­த­ வேண்டும். அந்த மகா ­நாட்­டுக்குப் பின்னர் உலக அரங்கில் இலங்­கைக்கு ஒரு தனி மதிப்பு இருந்­தது என்­ப­தையும் மறுக்க முடி­யாது. அத்­த­னையும் இன்று தவி­டு­பொ­டி­யாகி ஒரு வங்­கு­ரோத்துப் பொரு­ளா­தா­ரத்தை எதிர்­நோக்கும் இலங்கை மேற்கு நாடு­களின் எதிர்ப்­பையும் சமாளிக்க வேண்­டிய ஒரு துர்ப்பாக்­கிய நிலைக்குள் சிக்­கி­யுள்­ளது. இந்த நிலை எவ்­வாறு உரு­வா­னது?

சீனம்சார் வெளி­நாட்டுக் கொள்கை
அன்­றைய அணி­சேராக் கொள்­கையின் ஓர் அ­ம்சம் அண்டை நாடான இந்­தி­யா­வுக்கு வெளி­நாட்­டு­றவில் முத­லிடம் வழங்­கப்­பட்­டமை. அதனால் இலங்கை அர­சுக்கு அர­சியல் நெருக்­க­டிகள் ஏற்­ப­டு­மி­டத்து இந்­தி­யாவே உட­ன­டி­யாக உதவி செய்ய முன்­வந்­தது. 

அதே போன்று இந்­தி­ய -­ பாக்­கிஸ்தான் போரிலும் இந்­தி­ய -­ சீனப் போரிலும் இலங்கை ஒரு சமா­தானப் பற­வை­யாக அன்று பறந்திருந்தது. ஆனால் இலங்­கையின் உள்­நாட்டுப் போருக்குப் பின்னர் சீனா­வுடன் இலங்­கை­பட்ட கடனை இறுக்க முடி­யாமல் அந்த நாட்டின் அழுத்­தங்­க­ளுக்கு இசைந்து செயற்­ப­ட­வேண்­டிய ஒரு நிலைக்கு இலங்கை அரசு தள்­ளப்­பட்­டது. 

அந்த அழுத்­தங்கள் படிப்­ப­டி­யாக அதி­க­ரிக்­கவே இலங்­கையின் வெளி­நாட்டுக் கொள்­கையும் சீனம் ­சார்ந்த ஒரு கொள்­கை­யாக மாறி இந்­தி­யா­வுக்கு முத­லிடம் என்ற நிலையும் கைவி­டப்­பட்­டது. இதன் தாக்­கத்தை விளங்­குதல் அவ­சியம்.

சீனாவின் பொரு­ளா­தார எழுச்­சியும் அது ஓர் உலக வல்­ல­ர­சாக வேண்­டு­மென்ற இலட்­சி­யமும் அமெ­ரிக்க வல்­ல­ர­சுக்கும் அதன் ஐரோப்­பிய நேச­நா­டு­க­ளுக்கும் எழுந்துள்ள மிகப்­பெரும் சவால். இதனால் ஒரு புதிய பனிப்போர் இன்று உலகை அச்­சு­றுத்தி வருகின்றது. 

இந்தப் பனிப்­போரில் இந்து சமுத்­திரம் ஒரு முக்­கிய கள­மாக மாறியுள்­ளது. ஒரு பக்­கத்தில் அந்தச் சமுத்­தி­ரத்­தி­னூ­டாக புதிய பட்டுப்­பாதை ஒன்றை அமைத்துத் தனது பொரு­ளா­தார, வர்த்தக, நலன்­களைப் பாது­காக்க சீனா விழை­கி­றது. மறு­பக்­கத்தில் சீனாவின் இந்­து­ ச­முத்­திர ஊடு­ரு­வலால் இந்­தியா அதன் பாது­காப்­புக்கு ஒரு புதிய திசை­யி­லி­ருந்து ஆபத்து எழுந்துள்ளதென அச்­சப்­ப­டு­கி­றது. 

இதற்கு மத்­தியில் அமெ­ரிக்க வல்­ல­ரசும் அதன் நேச நாடு­களும் இந்து சமுத்­தி­ரத்­துக்குள் நுழைந்து தமது கால­டி­களைப் பதித்து சீன எழுச்சியைத் தடுக்க முனை­கின்­றன. இந்த நிலையில் இலங்கை தனது சாணக்­கியக் குறைவால் சீனம்­சார்­பான வெளி­நாட்டுக் கொள்கையைக் கடைப்­பி­டித்து இந்­தி­யா­வி­னதும் அமெ­ரிக்க தலைமை­யி­லான மேற்கு நாடு­க­ளி­னதும் சீற்­றத்தைத் தேடிக்கொண்டுள்­ளதில் எந்த வியப்­பு­மில்லை.

மேற்கின் சீற்­றமும் சிறு­பான்மை இனங்­களும்
இலங்­கையின் சீனச்­சார்புக் கொள்­கையால் மேற்கில் எழுந்த சீற்றத்துக்கும் இந்­நாட்டின் சிறு­பான்மை இனங்­க­ளுக்கும் ஏதேனும் சம்­பந்தம் உண்டா? நிச்­சயம் உண்டு என்­ப­தைத்தான் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தமிழ்த் தலைவர்களுக்கு அனுப்­பிய அழைப்பு தெளி­வு­ப­டுத்­தி­யது. இதை இனி விளக்­குவோம்.

இலங்­கையின் சிறு­பான்மை இனங்­களின் நல­னுக்­காக மேற்கு நாடுகள் இன்­று­ வரை என்­றுமே கண்ணீர் வடித்­த­தில்லை. சர்வதேச அரங்­கு­க­ளிலும் புதின ஏடு­க­ளிலும் சந்தர்ப்பத்­துக்­கேற்­ற­வாறு ஆங்காங்கே சில பரிந்­து­ரை­களை மேற்கு நாடு­களின் தலைவர்கள் சிறு­பான்மை இனங்­களின் சார்­பாகத் தெரி­வித்­த­போதும் செயலளவில் அவர்கள் எதையும் உருப்­ப­டி­யாகச் செய்­ய­வில்லை. 

ஏனெனில் அவர்களின் நோக்­க­மெல்லாம் மேற்கின் உலகாதிபத்தியத்தை பல திசை­க­ளிலும் நிலை­நாட்­டு­வதே. அந்த இலட்­சியம் நிறை­வே­று­வ­தற்­காக சிறு­பான்மை இனங்­களை மட்டுமல்ல பெரும்­பான்மை இனங்­க­ளைக்­கூட அவர்கள் பலியாக்கவும் தயங்­க­மாட்­டார்கள். இதற்கு ஐரோப்­பாவின் வரலாற்றிலே ஏரா­ள­மான ஆதா­ரங்­க­ளுண்டு.

இலங்­கையின் சிறு­பான்மை இனங்கள், அதிலும் குறிப்­பாகத் தமிழினம், பல தசாப்­தங்­க­ளாகத் தனது அப­யக்­கு­ரலை உலக அரங்கில் எழுப்­பி­யுள்­ளது. ஆனால் அதன் குறை­பா­டு­களை இலங்கையின் உள்­நாட்டுப் பிரச்­சி­னை­யெ­னவே மேற்­கு­லகு தட்டிக்க­ழித்­தன. அந்த நிலை இப்­போது மாறி­யுள்­ளது. இதற்கு இரண்டு கார­ணங்­க­ளுண்டு. ஒன்று புலம்­பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் அழுத்­தங்கள். இரண்­டா­வது இலங்­கையின் சீனச்­சார்புக் கொள்­கைகள்.

ஏறத்­தாழ எழு­நூ­றா­யிரம் இலங்கைத் தமிழர்கள் இன்று கனடாவிலும், பிரித்­தா­னி­யா­விலும், அமெ­ரிக்­கா­விலும் ஏனைய மேற்கு நாடு­க­ளிலும் வாழ்­கின்­றனர். அவர்கள் கல்­வி­ய­றி­விலும், தொழில் மேம்­பாட்­டிலும் உத்­தி­யோ­கங்­க­ளிலும் உயர்வடைந்து அந்நா­டு­களின் அர­சி­ய­லிலும் ஓர­ளவு அங்கம் வகிக்கத் தொடங்கியுள்ளனர். 

இந்­தப்­ப­லத்­தினை உப­யோ­கித்து மேற்­கு­லகத் தலைமைத்துவத்துடன் இலங்­கை­யிலே வாழ்­கின்ற தமி­ழ­ருக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­க­ளைப்­பற்றி இடை­ய­றாது எடுத்­துக்­கூறி அவற்றை நிவர்த்தி செய்­வ­தற்கு மேற்கு அர­சு­களின் ஒத்­து­ழைப்பை அய­ராது அவர்களின் அமைப்­புகள் கேட்­கின்­றன. அவர்களுடன் சேர்ந்து புலம்­பெயர்ந்து வாழும் சிறு அள­வி­லான இலங்கை முஸ்லிம்களும் அதே கோரிக்­கையை முஸ்லிம் நாடு­களின் ஊடாக முன்­வைக்­கின்­றனர். 

இந்தக் கோரிக்­கை­களே மேற்கு நாடு­க­ளுக்கு இலங்கை அர­சின் மேல் எழுந்­துள்ள சீற்­றத்தை வெளிப்­ப­டுத்த ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளன. சீனம்சார் இலங்­கையைப் பழி­வாங்க சிறு­பான்மை இனங்­களின் அவ­ல­நிலை ஒரு அரிய துரும்­பாக மாறியுள்­ளது. 

‘சீனாவைக் கைவிட்டு எம்­மோடு சேர்’, என்று வெளிப்­ப­டை­யாகக் கூறாமல் ‘சிறு­பான்மை இனங்­களை நசுக்­காதே. அவ்­வாறு நசுக்கினால் உனக்­கெ­தி­ராக நாங்கள் நட­வ­டிக்­கைகள் எடுப்­போம்’, என்று அவை மறை­மு­க­மாக அச்­சு­றுத்­து­கின்­றன.

கடந்த வருடம் புரட்­டாதி மாதம் ஜெனி­வாவில் நிறை­வே­றிய ஐக்­கிய நாடுகள் மனித உரிமை சபையின் இலங்­கைக்கு எதி­ரான தீர்மானமும், அண்­மையில் அமெ­ரிக்க காங்­கி­ரசில் கொண்டு வரப்பட்ட இலங்­கையின் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம் என்ற பிரே­ர­ணையும், ஐரோப்­பிய ஒன்­றி­யத்தால் இலங்­கையின் ஏற்று­ம­தி­க­ளுக்கு வழங்­கப்­படும் குறைந்­த­பட்ச இறக்­கு­மதி வரியும் ஏனைய சலு­கை­களும் நீக்­கப்­படும் என்ற அச்­சு­றுத்­தலும் முழுக்க முழுக்க சர்வதேச சாயம் பூசப்­பட்ட நட­வ­டிக்­கை­களே. இவற்றுள் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அச்­சு­றுத்தல் இலங்­கையின் பொரு­ளா­தார மீட்­சியை வெகு­வாகப் பாதிக்கும். 

ஏனெனில் இலங்­கையின் ஏற்­று­ம­தி­க­ளுக்கு அது ஒரு பாரிய சந்தையாக விளங்­கு­கி­றது. அந்­தக்­க­தவு அடைக்­கப்­பட்டால் எத்தனையோ சிறு, நடுத்­தர, கைத்­தொழில் தாப­னங்கள் இலங்கையில் மூடப்­படும். இன்­றுள்ள பொரு­ளா­தாரச் சீர­ழி­வுக்கு மத்தியில் இதுவும் நடந்தால் நாட்டின் கதி என்ன? இதுதான் ஜனாதிபதி கோத்­தா­பய ராஜ­பக் ஷவை கதி­க­லங்க வைத்­துள்­ளது.

கூட்­ட­ணி­யுடன் பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்பு
சீனா­வை­ விட்டு அகல்­வ­தென்­பது அவ்­வ­ளவு இல­கு­வான காரி­ய­மல்ல. அந்த அள­வுக்கு ராஜபக் ஷ அரசு இலங்­கையை சீனா­விடம் அடகு வைத்­துள்­ளது. ஆகையால் மேற்கு முன்­வைத்­துள்ள சிறு­பான்மை இனங்­கள் ­பற்­றிய, அதிலும் குறிப்­பாக தமி­ழினம் பற்­றிய, குற்றச்சாட்டு­க­ளுக்கு ஒரு முடிவு காண்­ப­தன்­ மூலம் மேற்கின் அழுத்தங்­களைக் குறைக்­கலாம் என்று கரு­தி­ய­த­னா­லேயே ஜனாதிபதி அவ­சர அவ­ச­ர­மாக தமிழர் கூட்­டணித் தலைவர்களுடன் பேச்­சு­வார்த்தை நடாத்த அழைப்பு விடுத்தார். 

அது பின்னர் கால­வ­ரை­ய­றை­யின்றி பிற்­போ­டப்­பட்­டாலும் அந்தப் பேச்­சு­வார்த்தை விரைவில் நடை­பெற்றே தீரும். அவ­ருக்கு வேறு வழி இல்லை. ஆனால் முஸ்­லிம்­களும் நசுக்­கப்­படும் இன்­னொரு சிறுபான்மை என்­பது அவ­ருக்குத் தெரி­யாதா? அவர்களின் தலைமைத்­து­வத்தை ஏன் அவர் அழைக்­க­வில்லை?

முஸ்­லிம்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தையா? யாருடன் பேசு­வது?
முஸ்­லிம்­களின் குறை­பா­டு­க­ளையும் அவர்களின் கோரிக்கைகளையும் பற்றி உரை­யாட ஜனா­தி­பதி முன்­வ­ரா­த­தற்கு இரண்டு கார­ணங்­களைக் கூறலாம். ஒன்று, மந்­திரி சபைக்குள்ளேயே அவ­ரது மிக நெருங்­கிய முஸ்லிம் நண்­ப­ரொ­ருவர் நீதி அமைச்­ச­ராக இயங்­கு­கிறார். அவரைப் பல எதிர்ப்­பு­க­ளுக்கு மத்தி­யிலும் நாடா­ளு­மன்­றத்­துக்குள் பின்­க­தவால் நுழைத்­த­வரும் ஜனா­தி­ப­தியே. அவ்­வா­றி­ருக்­கும்­போது அவ­ரு­ட­னேயே முஸ்­லிம்கள் பற்­றிய பிரச்சினை­களை கலந்­து­ரை­யா­டலாம் என்ற ஓர் எண்ணம். ஆனால் அவர் என்­றுமே அன்­றைய ஒரு பதி­யுத்­தீ­னுக்கு இணை­யாக முஸ்லிம்கள் மத்­தியில் மதிக்­கப்­ப­ட­மாட்டார் என்­பதை ஜனா­தி­பதி உணர்வாரா? 

இரண்டு, இப்­போது நாடா­ளு­மன்­றத்­துக்குள் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் ஆத­ரவை பணத்­தையும் பத­வி­க­ளையும் கொடுத்து வாங்கி விடலாம் என்ற ஒரு நம்பிக்கை. அதை பலமுறை இந்த அங்கத்தவர்கள் நிரூபித்துள்ளனர். ஆதலால் தமிழினத்தைப் போன்று முஸ்லிம்களையும் ஒரு பொருட்டாக நினைக்க வேண்டியதில்லை என்பதனாலேயே அவர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை எனக் கருத இடமுண்டு. ஆனால் இந்த அங்கத்தவர்களின்மீது முஸ்லிம் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதை ஜனாதிபதி அறிவாரா? அவ்வாறாயின் யாருடன் பேசுவது?

இன்­றைய இலங்­கையில் முஸ்லிம் சிவில் இயக்­கங்கள் பல இயங்குகின்­றன. அவற்றுள் தனியே முஸ்லிம் பெண்­க­ளைக்கொண்ட இயக்­கங்­களும் உண்டு. அந்த இயக்­கங்­க­ளுக்­குத்தான் முஸ்லிம் இனத்தின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களும் குறை­பா­டு­களும் விளங்கும். 

இது கடந்த சில தசாப்­தங்­களில் முஸ்லிம் சமூ­கத்­தி­லேற்­பட்ட கல்வி விழிப்பால் ஏற்­பட்ட ஒரு வர­வேற்­கத்­தக்க மாற்றம். ஆகவே அவர்களுடன் ஜனா­தி­பதி கட்­டாயம் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும். அண்­மையில் ஐம்­பத்­தேழு நாடு­களை அங்கத்தவராகக் கொண்ட உலக முஸ்லிம் கூட்­டு­றவு அமைப்பு இலங்கை முஸ்லிம்களுக்­கெ­தி­ராக ராஜபக் ஷ அரசு இழைக்கும் அநீ­தி­களைக் கண்­டித்து ஒரு பிரே­ர­ணையை நிறை­வேற்­றி­யது. அந்த நிகழ்­வுக்குப் பின்னால் புலம்­பெ­யர்ந்த இலங்கை முஸ்­லிம்­களின் அழுத்­தங்கள் இருந்­தன என்­பதை இந்த அரசு அறி­யுமா? அந்த அழுத்­தங்கள் இன்னும் தொடரும். 

ஆகவே முஸ்லிம் சிவில் இயக்­கங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அவர்­களின் குறை­களை நிவர்த்தி செய்­வது ஜனா­தி­ப­தியைப் பொறுத்­த­வரை புத்­தி­சா­து­ரி­ய­மா­னது. நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் அது உகந்தது.

Vidivelli

No comments:

Post a Comment