இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளருக்கு கொவிட் தொற்று - News View

About Us

About Us

Breaking

Friday, July 9, 2021

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளருக்கு கொவிட் தொற்று

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேண்ட் ஃப்ளவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பின்னர் இலங்கைக்கு திரும்பிய முன்னாள் சிம்பாப்வே வீரர் கிரேண்ட் ஃப்ளவர், வைரஸ் பற்றி அறிந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் நான்கு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தங்களது கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து கொழும்பில் தற்சமயம் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கை வீரர்களும் ஆதரவு ஊழியர்களும் இங்கிலாந்திருந்து நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னர் கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுததப்பட்டுள்ளனர்.

தற்சமயம் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி வரும் ஃப்ளவரின் கொவிட்-19 நேர்மறை அறிக்கை இலங்கை-இந்தியா தொடரில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜூலை 13 முதலம் 23 வரை நடைபெறும் வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரில் இரு அணிகளும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் களம் காணவுள்ளன.

No comments:

Post a Comment