கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்ட மூலம் ஒட்டு மொத்த பல்கலைக்கழங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் - கலாநிதி ஹரினி அமரசூரிய - News View

Breaking

Post Top Ad

Friday, July 9, 2021

கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்ட மூலம் ஒட்டு மொத்த பல்கலைக்கழங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் - கலாநிதி ஹரினி அமரசூரிய

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்ட மூலம் ஒட்டு மொத்த பல்கலைக்கழங்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாகும். இராணுவ கலாசாரத்துக்கும் உயர் கல்விக்கும் வித்தியாசம் இருக்கின்றது. அதனால் உயர் கல்வியில் இராணுவ கலாசாரத்தை புகுத்துவது மிகவும் ஆபத்தாகும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்ட மூலம் நாட்டில் இருக்கும் அனைத்து பல்கலைக்கழங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த சட்ட மூலம் தொடர்பில் எமக்கு எழுந்த சந்தேகம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற செயற்குழுவுக்கு எமது பரிந்துரைகள் சிலவற்றை தெரிவித்தபோது அதற்கு எமக்கு கிடைத்த பதிலில், அந்த சந்தேகங்கள் உறுதியாகின.

விசேடமாக இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி அறவிடுவது, இந்த பல்கலைக்கழகம் திறைசேரிக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக எனவும், அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ளும் எதிர்பார்புடன் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்படியானால் இவர்கள் உயர் கல்வியை நாட்டின் ஏனைய தென்னை. இறப்பர் துறைகளுக்கு சமப்படுத்தியே இருக்கின்றனர். ஏனைய துறைகளை விற்பனை செய்து சம்பாதிக்கலாம். ஆனால் கல்வியை அவ்வாறு செய்ய முடியாது.

கல்வியை விற்று சம்மாதிக்கும் நிலைக்கு செல்லக் கூடாது. அதேபோன்று இராணுவ நிர்வாகம் அங்கு இடம்பெறுகின்றதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

கொத்தலாவலை பல்கலைக்கழகத்தின் தீர்மானம் எடுக்கும் 9 பேர் கொண்ட குழுவில் 5 பேர் கோரமாகும் அதில் இரண்டு பேர் இராணுவ கொமாண்டர்களும் பல்கலைக்கழக பீடாதிபதியும் இருக்க வேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் தொடர்பான தீர்மானங்களை இராணுவத்தினர் மேற்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கல்விக் கூடத்துக்குள் இராணுவத்தினரை தலையிடச் செய்வது எந்தளவு பாரதூமானது என்பது கல்வி அமைச்சருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவர் இவை எதனையும் தெரியாமலே இங்கு கதைத்தார்.

மேலும் இராணுவ கலாசாரத்த்துக்கும் உயர் கல்விக்கும் பாரிய வித்தியாசம் இருக்கின்றது. இராணுவ கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு திருமணம் முடிக்க முடியாது. கூட்டங்களை நடத்த முடியாது போன்ற பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் எமது சாதாரண பல்கலைக்கழங்களில் அவ்வாறு இல்லை. மாணவர்களுக்கு பிரச்சினைகளை வெளிக் கொண்டுவர உரிமை இருக்க வேண்டும்.

அவ்வாறெனில் பல்ககலைக்கழகமொன்றின் நோக்கத்தை எவ்வாறு இதில் எதிர்பார்க்க முடியும். இராணுவ பயிற்சி அது தொடர்பான கல்வி பயிலும் இடமாக இது இருந்தால் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இது அவ்வாறு அல்ல. சாதாரண மாணவர்களும் படிக்கும் பல்கலைக்கழகம். இதில் இராணுவ சலாசாரத்தை ஏற்படுத்துவது எமது பாரிய பாதிப்பாகும் என்பதை அனைவரும் உண்ர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad